உன்னிடம் நேரில் சொல்லத்
தவறிய சில வார்த்தைகளை
உனக்காய் கூறிட
எண்ணிய என் உணர்வுகளில்
சில.!
இங்கே!
நம் நட்பின் நாட்களில்
உன் அன்பில் உன் நேசிப்பில்
மதி மயங்கி தான் போகிறேன்!
உன்னால் தான் நட்பின்
ஆழத்தையும்! அதனால்
உண்டாகும் குதுகலத்தையும்
உணர்கிறேன்! உன்னோடு
பேசுகின்ற நாழிகைகள் போவதே
தெரிவதில்லை எனக்கு !
உன் நட்பினையும் உன் அன்பையும்
எண்ணியே எனது தனிமைகளைத்
துணையாக்குகிறேன் நான் !
உன்னால் உன் அன்பால்
உணர்ந்தேன் நான் உயிருள்ள.
உணர்வோடு ஒன்றான ஓர் உணர்வை
நம் நட்பை அனுபவிக்கிறேன்!
உன்னிடம் பேசி பழகிய பின்தான்
என் வார்த்தைகள் அழகாயின,
அதிசயமாயின! நம் நட்போடு
நண்பர்களாய் நாளும் நாம் பயணமாக
என்றும் பிரார்த்திக்கிறேன் நான்
இறைவனிடம்! எல்லா உறவுகளின்
அன்பையும் நீ என்னிடம் காட்டும்
போது எத்துனை எத்துனை
புத்துணர்வு கொள்கிறேன் நான்
என்பதை எப்படி சொல்வது
என தெரியவில்லை! என்
நிமிடங்களையும் என் பயணங்களையும்
அழகாக்கி கொண்டிருக்கும்
நல்ல நண்பன் நீ !
என் துன்பங்களை நான்
பகிர்ந்தால் தான் துயரம்
நீங்கி துள்ளல் கொள்கிறது
மனம் ! என் இன்பங்களை
உன்னிடம் கூறாவிட்டால் அது
சந்தோசம் தருவதில்லை எனக்கு!
என் வாழ்வில் நீயொரு பொக்கிஷம்
எனக்கு! என் உணர்வுகளையும்
உள்ளத்தையும் நம் நட்பால்
நிரப்புகிறேன் நான் !
நான் உனக்கு நல்ல தோழியா
என நான் அறியேன் ! ஆனால்
நீதான் என் நண்பர்களில்
எல்லாம் முதலாமானவன்!
நம் நட்பால் நட்பினை
அலங்கரிப்போம் மகிழ்வோடு
Comments
Post a Comment