என் இரவுகளை இரையாக்கி
என் நினைவுகளை உனதாக்கி
என் இமைகளை இமைக்காமல்
என் பேனாவை என் காதலால் நிரப்பி
உனக்காய் உருவாக்குகிறேன்.
என் கடிதத்தை.
என் உணர்வுகளின்
தொடக்கம்
இங்கே உனக்காய்
உன்னால் உயிரற்ற
என்
உணர்வுகள் உயிர்கொண்டது
உனக்கு தெரியுமா ?????
என் உணர்வுகளால்
-
என் உலகம் மறப்பது
உனக்கு தெரியுமா ?????
தெரிவதற்கு சந்தர்ப்பமில்லை தான்!
இதோ இப்போது தெரிந்துகொள்!
என் கண்களில் நான் காணும்
கனவுக்குள்ளும்!
உன் நினைவுகளால்
நிரப்பபட்ட
நினைவிற்குள்ளும்
நான் மூழ்கிப்போய்ப்
பல
நாட்கள் கடந்துவிட்டன!
உன்னால் அலைபாயத் தொடங்கிய
என் உள்ளம் இன்னும் வரவில்லை
உன்னைவிட்டு உன் நினைவைவிட்டு!
மௌனமாய் கழிகின்றன!
என் நாழிகைகள் உன்னால்!
உன் காதலால்......
Comments
Post a Comment