
ஒரு பெண்ணின் இதயம்
அதில் எண்ணம் அதிகம்......
கண்மூடி திறக்கும் நொடியில்
ஓராயிரம் உலகம் மலர்ந்து
மறையும்
மணம் வீசி திரியும்!
எத்தனையோ புது புது உலகம்
தோன்றும்! தோன்றி இன்பத்தையும்
இனிய நினைவுகளையும் கொடுக்கும்!
எண்ணங்களை கற்பனைகளால்
அலங்கரித்து அழகு பார்க்கும்!
உண்மையையும் பொய்யையும்
இரண்டற கலந்து இதயத்தில்
நிறுத்தி இன்பத்தில் மூழ்கடித்து
திண்டாட செய்யும்! துன்பத்தை
விழியில் நிறுத்தி கண்ணீரால்வேடிக்கை பார்க்க செய்யும்!
மௌனத்தில் புத்தம் புதிய
மொழிகளை உருவகப் படுத்தும்!
ஆசைகளை அணைத்து கொஞ்சும்!
நிராசைகளை தள்ளிவிட்டு விட
எண்ணும்! கண்ணீரையும்
கவலையையும் பூட்டி பாதுகாக்கும்!
பூவாய் தென்றலாய் மிருதுவாய்
மணம் வீசி செல்லும் -ஒரு
பெண்ணின் இதயம் அதில்
எண்ணம் அதிகம் ஆம்
அதில் எண்ணம் அதிகம்
Comments
Post a Comment