
உன் வண்ணமும் உன் வனப்பும்
அழகு தான்! அர்த்த
இராத்திரியிலும் சிவக்கின்ற
உன் மேனியை பார்த்து பார்த்து
தான் பல வீடுகள் உன்னை
அணைத்துக் கொண்டு
உயிர் விடுகின்றனவோ?
நிலையற்ற உருவம் கொண்ட
உன்னை பார்த்து நிலையான
எத்தனையோ உருவங்கள்
அச்சமுற்று ஒதுங்கி போகிறார்கள்!
சில மூடர்களோ உன்னை
தழுவும் ஆவலால் தன்னை
சாம்பலாக்குக்கிறார்கள்!
நீயல்லவா கண்ணகியையும்
சீதையையும் சகுந்தலையையும்
விட உயர்ந்த கற்புக்கரசி!
உன்னால் உன்னை சுற்றி
இருப்பவரை பிரகாசப் படுத்துகிறாய் !
உயிர் வேண்டும் இடத்தில் உயர்வாய்
ஜொலிக்கிறாய்! உயிர் வாங்கும்
இடத்தில் உயிரையும் உடலையும்
உனதாக்கி உன்னோடு கலந்துக்
கொள்ள செய்கிறாய்! உன்னை
பார்ப்பவர்களை மதிமயங்கி
போக செய்கிறாய்! உன்னை
சாட்சியாய் கொண்டு தான்
எத்தனையோ திருமணபந்தங்கள்
தொடங்கப் படுகின்றன!
நீயே பஞ்சபூதங்களில் எல்லாம்
தலை வணங்கா தலையாய்
இருந்து பூமியை ஆட்சி
செய்து கொண்டிருக்கிறாய் நீ.....
Comments
Post a Comment