ஏனோ சில நாட்களாய்
பொய்ப் பேசுகிறது
என் விழிகள்..!
உன்னுடன் வர இசைந்து
அலைப்பாய்ந்து நிற்கிறது
என் மனம்..
நிற்கிறேன் நான்!
உன்னில்தொலைத்த என்னை
தேட நினைக்கிறது
என் உள்ளம்...
ஆனால் வெட்கத்தால்
சிவந்து நிற்கிறேன்
நான்.!
ஆயிரமாயிரம்
என் ஏக்கத்தை
எடுத்துரைக்கத் துடிக்கிறது
என் உதடுகள்
ஆனால்
மௌனமெனும் பூட்டால்
வார்த்தைகளைப் பூட்டி
விடுகிறது என் இதயம்
காதலால் கண் கலங்கி
நிற்கிறேன் நான்
Comments
Post a Comment